2026 : பாபா வங்காவின் அச்சமூட்டும் கணிப்பு
வரும் 2026ஆம் ஆண்டு இயற்கைப் பேரிடர்களால் உலகம் பாதிக்கப்படவிருப்பதாக, பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டே அவர் மறைந்துவிட்டாலும், உலகில் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்து வைத்திருக்கிறார்.
இங்கிலாந்து இளவரசி டாயனா மரணம் முதல் கொவிட் பேரிடர் வரை அவர் பல்வேறு சம்பவங்களை மிகச் சரியாக கணித்திருந்தார். இந்த நிலையில்தான், 2026ஆம் ஆண்டு அவர் கணித்திருக்கும் பல விஷயங்கள் தற்போது வைரலாகியிருக்கிறது.
மிக மோசமான இயற்கைப் பேரிடர்கள்
அதாவது, வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு, மிக மோசமான இயற்கைப் பேரிடர்கள் நிகழும் ஆண்டாக இருக்கும் என்றே பாபா வங்காவின் கணிப்புகள் சொல்கின்றன.
உலகம் முழுக்க ஏராளமான நிலநடுக்கங்கள், எரிமலை சீற்றங்கள், மிக மோசமான மழை போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடர்கள் மனித உயிர்களையும் உள்கட்டமைப்புகளையும் சீர்குலைத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு வரப்போகும் வேற்றுக்கிரக விண்கலங்கள்
அவர் கணித்திருப்பது, ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் உண்மையாகி வருகிறது. கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. பல இடங்களில் நிலநடுக்கம், . ஏற்பட்டுள்ளன.
உலகளவில் மிகப் பெரிய நாடுகளுக்கு இடையேயான போர்களும் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், உலகின் மிக முக்கிய துறைகளை இயந்திரங்கள் நிர்வகிக்கத் தொடங்கும், இதனால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும், உலகத்துடன் தொடர்பில்லாத வேற்றுக்கிரக விண்கலன்கள் பூமிக்கு வரும், ஏலியன்களை மனிதர்கள் சந்திப்பார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
