வத்தளையில் இரும்பு தயாரிப்பு தொழிற்சாலையில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா
corona
wattala
ironfactory
By Sumithiran
வத்தளை - ஹேகித்த பகுதியில் அமைந்துள்ள பிரபல இரும்பு தயாரிப்பு தொழிற்சாலையில் பலருக்கு கொரோனா தொற்றியதை அடுத்து அந்த தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த இரும்பு தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் 194 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையில் அதிகமாக இந்தியர்களே பணியாற்றி வரும் நிலையில் தொற்று உறுதியானவர்களில் சுமார் 92 இந்தியர்கள் அடங்குகின்றனர்.
தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லவும் ஏனையவர்களை தொழிற்சாலைக்கு உள்ளேயே தனிமைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி