இன்று அதிகாலை நடந்த கோரம் : மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்
Sri Lanka Police
Matale
Sri Lanka Police Investigation
By Sumithiran
மனைவியுடனான முரண்பாட்டை அடுத்து அவரை கணவர் வெட்டிக் கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.மாத்தளை(matale) - இரத்தோட்டை, கைகாவல இசுருகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள்
கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு இரு பிள்ளைகள் (மகள் 11 - மகன் 13) இருப்பதும் தெரியவந்துள்ளது.
காவல்துறையினரால் கைது
கொலைக்குப் பின்னர் மறைந்திருந்த சந்தேகநபரான கணவர், இரத்தோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இரத்தோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 வாரங்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
3 வாரங்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்