அரங்கேறிய கொடூரம் - மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன் - அதிர வைக்கும் வாக்குமூலம்
தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் புளியங்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்த கொடூர சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளம் குடும்பஸ்தரான மரணமடைந்த பெண்ணின் கணவர் வழங்கிய வாக்கு மூலத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவர்ணலதா என்ற 32 வயதான தனது மனைவி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும் அதில் ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வு கிடைக்காத நிலை
தான் கொழும்பில் தங்கி இருந்து கட்டட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளம் குடும்பஸ்தர், நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது தொலைபேசிக்கு ஒரு 21 வயது இளைஞனினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்த நிலையில் தான் கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து என் மனைவியுடன் பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியை தாய் சேய் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர், இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும் இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டபோதிலும் அவர் எவ்விதமான பதிலும் கூறவில்லை.
நேற்று (03.06) காலை அவர் அதை ஒத்துக் கொண்டதையடுத்து தனது மனைவியை புளியங்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியே சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அந்த காட்டுப் பாதையின் வழியே 200 மீற்றர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் என கேட்டபோது, தான் அந்த குறித்த 21 வயது இளைஞன் இந்த பகுதிக்கு வருவதாகவும் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு காண்பதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறதாகவும் கூறியதாகவும் காவல்துறையிடம் கூறி இருக்கின்றார்.
மறைத்து வைத்திருந்த கத்தி
இதன் பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியின் மூலம் தனது மனைவியை வெட்டியதாகவும், அவர் சிறிது தூரம் ஓடி விழுந்ததன் பின்னர் தான் மனைவியை மூன்று முறை வெட்டி கழுத்தை துண்டாக்கி அதனை அவர் அணிந்திருந்த மழைக் கவசத்தினால் மூடி மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்து கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர்.
இதனை அடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி இருந்தனர்.
குறித்த பகுதிக்கு தடயவியல் காவல்துறையினரும் வருகை தந்து அங்கிருந்த சான்று பொருட்களை சேகரித்ததோடு, குறித்த விடயம் தொடர்பாக புளியங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
வவுனியாவில் (Vavuniya) இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவன் மனைவியின் தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
இந்த கொடூர சம்பவம் இன்று (03.06.2025) காலை வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் 32 வயதான ரஜூட் சுவர்ணலதா எனவும் அவர் கர்ப்பிணி பெண் என தெரிவிக்கப்படுகின்றது.
செம்மணிப் புதைகுழியில் சிறுமி - பெண்களின் எலும்புக்கூடுகள் - அடித்தே கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
குடும்ப முரண்பாடு காரணம்
காவல் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலை செய்து காட்டுப்பகுதியில் எறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொலை செய்த மனைவின் உடலை காட்டுப் பகுதியில் வீசியுள்ளதாக கணவன் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில், பெண்ணின் உடல் சின்னப்பூவரசங்குளத்திற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில் இன்று காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து கணவனும்,மனைவியும் ஒரு மோட்டார் சைக்களில் புளியங்குளம் நோக்கி சென்றுள்ளனர். இதன்போதே கொலை செய்ய திட்டமிட்டிருந்த கணவர் சின்னப்பூவரசன்குளம் காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்ததாக தெரிவித்திருந்தார்.

புளியங்குளம், நொச்சிக்குளம் - அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கோ.சுகிர்தரன் என்ற குடும்பஸ்தரே கொலையை செய்ததாக தெரிவித்து காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
You may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 5 மணி நேரம் முன்