மகளின் முன்னே மனைவியை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த கொடூர கணவன்
மனைவியை நிர்வாணமாக்கி, கை கால்களை கட்டி, உடலில் மிளகாய் தூளினை தடவி அட்டையை ஊர விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கணவனை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
பாதுக்க அங்கம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பாதுக்க காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குடித்துவிட்டு வந்து கொடூர சித்திரவதை
கணவர் குடித்துவிட்டு வந்து தனது கை, கால்களை கட்டியதாகவும், மிளகாய் தூளினை எடுத்து தனது உடலில் பூசியதால் தான் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு சந்தர்ப்பம் வழங்காத போது, கொடூரமாக தாக்கியதாக அப்பெண் அளித்துள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகளின் முன்னே இடம்பெற்ற சித்திரவதை
இந்த மனிதாபிமானமற்ற சித்திரவதை தனது பதினொரு வயது மகளுக்கு முன்னால் செய்யப்பட்டதாகவும், மகளும் மிகவும் அசௌகரியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த பெண் சிகிச்சைக்காக பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
