29 வயது இளம் மனைவியை கொன்ற கணவன் - வலைவீசும் காவல்துறை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Thulsi
குடும்பத் தகராறொன்றின் போது, கணவனால் தாக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (03) இரவு அரலகங்வில காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிம்பொகுண பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பிம்பொகுண, அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடுமையான வாக்குவாதம்
நேற்றிரவு தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், பின்னர் கொடூரத் தாக்குதலாக மாறியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த பெண், ஆபத்தான நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான பெண்ணின் கணவரைக் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி