வாய்த்தர்க்கம் முற்றியதில் மனைவியின் பற்களை பதம் பார்த்த கணவன்
Police spokesman
Sri Lanka Police Investigation
By Sumithiran
மொனராகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மூப்பன்ன-வெலிவத்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரின் பற்களை அவரது கணவன் கழற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி இரவு மதுபோதையில் வந்த கணவனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி இறுதியில் பெண்ணின் முகத்தில் கணவன் தாக்கியுள்ளார்.
தப்பிச் சென்ற கணவன்
இதன்போது, அப்பெண்ணின் நான்கு பற்கள் கழன்று விழுந்துள்ளன. அத்துடன், இத்தாக்குதலில் காயமடைந்த மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண், மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கணவன் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற நபரைக்
கைதுசெய்வதற்கான
விசாரணைகளை மொனராகலை
காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்