ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என இயங்கிய விபசார விடுதி - யாழ்ப்பாண பெண் உட்பட மூவர் கைது
ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் அதன் முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளனர்.
முகாமையாளர் குருநாகலையைச் சேர்ந்தவரென்றும் பெண்கள் இருவரும் கோப்பாய்,பயாகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் இருவரும் 23, 32 வயதுகளை உடையவர்கள் என்றும் ஆரம்பவிசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாககாவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல்

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலைக்கொண்டு நீதிமன்ற உத்தரவுடன் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும், காவல்துறைஅதிகாரி ஒருவர் இந்நிலையத்தின் சேவையைபெற்றுக் கொள்ள மாறுவேடம் பூண்டு இந்த ஆயுர்வேத நிலையத்திற்கு சென்றதன் மூலம் இவர்களை முறையாக கைது செய்ய முடிந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை மாஜிஸ்திரேட் முன் முன்னிலப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.