விடுமுறையில் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் செய்த காரியம்
Police spokesman
Sri Lanka Police Investigation
Crime
By Jaso
வீடொன்றிற்குள் ஐஸ் அருந்தியதாக கூறப்படும் பயிலுனர் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின் பேரில் தெஹியோவிட்ட காவல்துறை அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பயிலுனர் காவல்துறை கான்ஸ்டபிளிடம் 180 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறை காவலில் வைக்கப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விடுமுறையில் சென்றவர் பணிக்கு திரும்பவில்லை

இந்த சந்தேகத்திற்குரிய பயிலுனர் கான்ஸ்டபிள் மொரட்டுவை தலைமையக காவல்நிலையத்தில் பணிபுரிபவர் எனவும், அவர் டிசம்பர் 12ஆம் திகதி விடுமுறையில் இருந்ததாகவும் மீண்டும் பணிக்கு சமூகமளிக்கவில்லை எனவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர் அறிமுகமானவர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று ஐஸ் குடித்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி