விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (17) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றதுடன், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்கத் தரப்பு சாட்சிகளிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, யோஷித ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் முன்னிலையாகி சாட்சிகளிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
வழக்குத் தாக்கல்
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததைத் தொடர்ந்து, சாட்சியங்கள் மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தெஹிவளை மற்றும் ரத்மலானை பகுதிகளில் 73 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள ஐந்து நிலங்களை வாங்கியதன் மூலம், யோஷித ராஜபக்ச பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளார் என குற்றம் சாட்டி சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |