காவல்துறை மா அதிபரின் மர்ம மரணம் - ஆரம்பகட்ட விசாரணையில் வெளியான தகவல்
சடலமாகக் மீட்க்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது
இன்று அதிகாலையில் மலாபே - தலஹேனாவில் உள்ள தனது இல்லத்தில் மீட்க்கப்பட்ட சி.டி. விக்ரமரத்ன, துப்பாக்கியைப் பயன்படுத்தி தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விடத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளராக உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
பிரேதப் பரிசோதனை
அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பவத்தில் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்ன முல்லேரியாவா மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.
மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை மற்றும் நீதித்துறை விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதேவேளையில் இச்சம்பவம் குறித்து வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து நியமிக்கப்பட்ட காவல்துறை குழுக்கள் முழுமையான விசாரணை நடத்தவுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்