சுரேஷ் சலேயின் ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளில் தனது சாத்தியமான கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக பரிசீலனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு இன்று(17.07.2026) இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கானது ஜூலை 21, 2026 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோகந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன்பாக இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலதிக பரிசீலனை
இன்றைய விசாரணையில் , மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, நீதிமன்றத்தின் முன் மேலதிக வாதங்களை முன்வைத்தார்.

சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை மேலதிக பரிசீலனைக்காக ஜூலை 21 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |