பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு : விஜயதாசவின் மகன் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

SJB Dr Wijeyadasa Rajapakshe Law and Order
By Sathangani Jul 17, 2026 08:02 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகிய மூவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (17) காலை மூவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு : விஜயதாசவின் மகன் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு | Rakitha Rajapakshe And Other Produce Before Court

முதலாம் இணைப்பு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் உள்ளிட்ட மூவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

விஜயதாச ராஜபக்சவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகிய மூவருமே சற்று நேரத்திற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து குறித்த சந்தேகநபர்கள் 1,200 இலட்சம் ரூபாவை இலஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபரின் மர்ம மரணம் - ஆரம்பகட்ட விசாரணையில் வெளியான தகவல்

காவல்துறை மா அதிபரின் மர்ம மரணம் - ஆரம்பகட்ட விசாரணையில் வெளியான தகவல்

நீதிமன்றத்தில் முன்னிலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை பாதுகாப்பதாகவும், அவரை சாதாரண விளக்கமறியலில் வைப்பதாகவும் குறிப்பிட்டு இவர்கள் ஹரக் கட்டாவின் மனைவியிடம் இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு : விஜயதாசவின் மகன் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு | Rakitha Rajapakshe And Other Produce Before Court

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக வெளியான குரல் பதிவுகள் கசிந்தமையை அடுத்து சந்தேகநபர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கடந்த மாதம் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களை ஜூலை மாதம் 3ஆம் திகதி கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் மூவரும் இன்று இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவுக்கு திடீர் இடமாற்றம்!

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவுக்கு திடீர் இடமாற்றம்!

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர்

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026