அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக குவைத்தை அதிரவைத்த ஈரானின் 12ஆவது பதிலடி நகர்வு
குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை (IRGC), தாக்கியதாக உரிமை கோரி உள்ளது.
இதன்படி அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான ஏவுகணை பாதுகாப்பு ரேடார், ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஹிமார்ஸ் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதனால் குறிப்பிட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் 12 வது அலை தாக்குதல்
ஈரானின் 12 வது அலை தாக்குதல் ஏவுகணை பாதுகாப்பு ரேடார், ஆயுதக் கிடங்குகள் மற்றும் HIMARS ஏவுதளங்கள் உள்ளிட்டவை இலக்காக தாக்கப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.ஜி.சி. கூறியுள்ளது.

ஏற்கனவே பொதுமக்களை குறிவைத்து உயிரிழப்புகளை ஏற்படுத்திய அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஈரானும் அமெரிக்காவும் கடந்த மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஆனால் சமீப நாட்களாக பதற்றம் அதிகரித்துள்ளதுடன், இரு தரப்பினருக்கும் இடையிலான தாக்குதல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |