வவுனியாவில் மகளை வன்புணர்வு செய்த தந்தை - கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை கொடுத்த நீதிபதி

Vavuniya Child Abuse Court of Appeal of Sri Lanka
By Thulsi Jul 17, 2026 02:30 AM GMT
Report

14  வயது சிறுமியான தனது மகளை தவறான முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, நேற்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொத்தமாக 12 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், நீதிமன்றத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.

மாத்தளை புதைகுழிக்குப் பின்னால் மறைந்திருக்கும் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள்...!

மாத்தளை புதைகுழிக்குப் பின்னால் மறைந்திருக்கும் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள்...!

47 வயது தந்தை

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பலமுறை தவறான முறைக்கு உட்படுத்தியதாக 47 வயது தந்தை மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

வவுனியாவில் மகளை வன்புணர்வு செய்த தந்தை - கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை கொடுத்த நீதிபதி | 45 Years Of Rigorous Imprisonment For Men

குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்து, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களம் 2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

வழக்கு விசாரணைகளின் போது, எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட நான்கு வன்புணர்வு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, இரண்டு தனித்தனி வழக்குகளில் நிரூபிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்...! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்...! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

அதிகபட்ச தண்டனை

மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 12 இலட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு இலட்சம் ரூபாயை நீதிமன்ற அபராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

வவுனியாவில் மகளை வன்புணர்வு செய்த தந்தை - கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை கொடுத்த நீதிபதி | 45 Years Of Rigorous Imprisonment For Men

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ ஆஜராகினார்.

தீர்ப்பளிக்கும் போது கருத்து தெரிவித்த நீதிபதி, பாதுகாக்க வேண்டிய இயற்கை பாதுகாவலரான தந்தையே இவ்வாறான கடுமையான குற்றத்தை புரிந்துள்ளதால், எந்தவித கருணையும் காட்டாமல் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். 

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் எதிரொலி! கைதிகளின் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் எதிரொலி! கைதிகளின் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026