பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்

Sri Lanka Army Sri Lankan Tamils Sarath Fonseka Mullivaikal Remembrance Day Sri Lanka Final War
By Independent Writer May 22, 2026 07:46 AM GMT
Report

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலம் எங்கே என்றும், சடலத்துக்கு என்ன நடந்தது என்பதும் எனக்கு தெரியும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அது பற்றி பகிரங்கமாக கூறமுடியாது என குறிப்பிட்ட அவர் அவ்வாறு கூறினால் அந்த இடத்துக்கு சென்று சிலர் நினைவேந்தல் நடத்தக்கூடும் எனவும் நினைவகம் அமைக்க முற்படக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே சரத் பொன்சேகா இந்த விடயங்களைக் தெரிவித்தார்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் சாரதிகளுக்கு அவசர அறிவிப்பு!

யாழிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் சாரதிகளுக்கு அவசர அறிவிப்பு!

சடலங்களை அடையாளம் கண்ட கருணா

குறித்த நேர்காணலின் போது “போர் தொடர்பில் நீங்கள் இன்றளவிலும் மனதுக்குள் இரகசியமொன்றை மறைத்து வைத்துள்ளீர்கள். எனக்குகூட அதை பற்றி குறிப்பிடமாட்டீர்கள். சிலவேளை உங்களது மனைவிக்குகூட அது தெரியாமல் இருக்கலாம். வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்துக்கு என்ன நடந்தது.” என ஊடகவியலாளரினால் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பட்டது.

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம் | I Know Where Is Prabhakaran S Body Sarath Fonseka

இதற்கு பதிலளித்த பொன்சேகா, “பிரபாகரன் போரில் கொல்லப்பட்டுவிட்டார். இது இரகசியம் அல்ல. பிரபாகரன் கொல்லப்பட்டதும் கருணாவை விமானத்தில் சம்பவ இடத்துக்கு அனுப்பினோம். சூசை, பொட்டு அம்மானின் மனைவி உட்பட அனைவரது சடலங்களையும் அவர் அடையாளம் கண்டார்.

பொட்டு அம்மானின் மனைவியின் கழுத்தில் மூன்று சயனைட்டுகள் இருந்தன. பொட்டு அம்மானுக்கு துப்பாக்கிச்சூடு பட்டதும், அவர் குண்டை வெடிக்கச் செய்து இறந்துவிட்டார் என கே.பி கூட குறிப்பிட்டிருந்தார்.

சற்றுமுன்னர் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வு

சற்றுமுன்னர் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வு

நினைவேந்தல் நடத்த முற்படக்கூடும்

பிரபாகரனின் சடலம் அடையாளம் காணப்பட்டது. பாரிய காயங்கள் இருந்தன. இது பற்றி எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளின் சீருடையில் இருந்தார். சீருடையை அகற்றுமாறு நான் கூறினேன். சரணடைந்தவர்களுக்கும் சீருடையில் இருப்பதற்கு நாம் அனுமதிக்கவில்லை.

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம் | I Know Where Is Prabhakaran S Body Sarath Fonseka

பிரபாகரனின் சடலத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நான் ஆலோசனை வழங்கினேன். அது என்னவென்பதை நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் அவ்வாறு சொன்னால் அந்த இடத்துக்கு சென்று சிலர் நினைவேந்தலை நடத்துவதற்கு முற்படக்கூடும்.

அதே பகுதியில் குறிப்பிட்டதொரு இடத்தில் சடலத்துக்கு இறுதியாக செய்யவேண்டியவற்றைச் செய்தோம். இடத்தை ஏன் சொல்ல முடியாது என்றால், சிலர் அங்கு சென்று நினைவகம்கூட அமைக்க முற்படலாம். பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் திட்டம் எனக்கு இருக்கவில்லை“ எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை குறித்த நேர்காணலின்போது இறுதிப் போரில் நடந்த மேலும் சில தகவல்களையும் சரத் பொன்சேகா வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026