ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -அதிபரின் ஆலோசகர் முற்றாக மறுப்பு
Kamal Gunaratne
Ruwan Wijewardene
UNP
By Sumithiran
பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவை நியமிக்க தாம் ஒருபோதும் முன்மொழியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அதிபரின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
"தற்போதைய பாதுகாப்பு செயலாளரின் பதவி நீக்கம் குறித்து நான் ஒருபோதும் முன்மொழியவில்லை, இருப்பினும் நான் அத்தகைய திட்டத்தை முன்வைத்ததாக சில வலைத்தளங்களில் செய்திகள் உள்ளன," என விஜேவர்தன தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
"எனது பெயர் இழுக்கப்பட்டது, எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த கதை வெளிவந்தது, மேலும் செய்தியை வெளியிட்ட யாரும் என்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது
பாதுகாப்புக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
