மற்றுமொருவருக்கு கிடைக்கவுள்ள ஆளுநர் பதவி
Amaratunga John
Ranil Wickremesinghe
UNP
By Sumithiran
சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க நேற்று முன்னதினம் நியமிக்கப்பட்ட நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவரும் தனக்கும் ஆளுநர் பதவி கிடைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரான ஜோன் அமரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் விரைவில் ஆளுநர் பதவி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் என்றார்.
மேலும், எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நவீன் திஸாநாயக்க நியமனம்
இதேவேளை சப்ரகமுவ மாகாண ஆளுநராக இருந்த டிக்கிரி கொப்பேகடுவ அண்மையில் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 21 மணி நேரம் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
4 நாட்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்