ஆளும்தரப்பு எம்.பியின் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் வரை தான் நாடாளுமன்றத்திற்கு சமுகமளிக்க போவதில்லை என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மூன்று மாத காலத்திற்கு தான் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாடு ஸ்திர நிலைமையை அடைந்ததன் பின்னர், தான் சபைக்கு வருகை தந்து அமர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தனக்கு ஆங்கிலம் தெரியாது, தன்னால் நாட்டை கட்டியெழுப்பவும் முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஆசனத்தை பெற்று ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வந்தால் நாட்டை சரிப்படுத்துங்கள். ஒரு ஆசனம் இருந்தால் ஏன் நாடாளுமன்றத்திற்கு வந்தீர்கள்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறினே ஏன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்தார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
