தாயகத்தில் இழந்த உணர்வை மீண்டும் உங்கள் கை சேர்க்கும் ஐபிசி பக்தி
இந்து மதமானது காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது.
ஏறக்குறைய 950 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது.
இந்தியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகள் என உலகின் பல்வேறு நாடுகளில் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பல்வேறு காரணங்களால் நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்து தமிழர்கள் சென்றிருந்தாலும் தங்களுடைய மொழி, சமயம், கலாசாரம் என்பவற்றை கைவிடாது பிற நாட்டு மக்களும் வியக்கும் வகையில் கடைபிடித்து வருகின்றனர்.
குறிப்பாக, ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து உலக நாடுகளுக்குச் சென்ற மக்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளிலேயே தங்களுக்கென்று ஆலயங்களை அமைத்துக் கொண்டு தங்களது பாரம்பரிய சமய கடமைகளை செய்து வருவதும் உண்டு.
இவ்வாறானவர்களுக்கு, தாயகத்தில் உள்ள ஆலயங்களின் வழிபாடுகளை மீண்டும் அருகில் இருந்து உணர்வது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொடுக்க எங்களின் புதிய தளமான ஐபிசி பக்தி தயாராகி வருகின்றது.
ஆலய வழிபாடுகள், ஜோதிடம், வாஸ்து, ராசி பலன்கள், ஆன்மீகம், எண்கணித ஜோதிடம் உள்ளிட்ட அனைத்தையும் இனி ஒரே தளத்தில் இலகுவாய் உங்கள் கைக்கு கொண்டு வந்து சேர்க்கின்றது ஐபிசி பக்தி இணையத்தளம்.
உங்களது ராசி பலன்கள், வாஸ்து போன்ற தகவல்களை அறிந்து கொள்ள ஐபிசி பக்தியுடன் இணைந்திருங்கள்.
ஐபிசி பக்தி இணையத்தளத்தைப் பார்வையிட இந்த Link ஐ க்ளிக் செய்யவும்.. |