ஐ.பி.சி தமிழ் வானொலியின் வளர்ச்சியை கண்டு பெருமை கொள்கிறேன்!! மூத்த ஊடகவியலாளர்

IBC Tamil Tamil Media Tamils Sri Lankan Peoples
By Kanna Jun 09, 2022 12:18 PM GMT
Report

தாயக செய்திகளை யுத்தகள நிலவரங்களையும் விடுதலைப்போராட்ட அரசியல் கள நிலவரங்களையும் ஐரோப்பிய தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உறவுப்பாலம் என்ற ஒரு மணிநேர சிற்றலை ஒலிபரப்பு ஊடாகவும் தந்த பெருமை ஐ.பி.சி தமிழ் வானொலியை சாரும் என முத்த ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி.சி தமிழ் வானொலியின் 25ஆவது ஆண்டு நிறைவு குறித்து தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்று யாழ் கலையகத்தில் ஐ.பி.சி தமிழ் வானொலி இன்று 25ஆவது நிறைவு கொண்டாட்டத்தில் ஊடகவியலாளர் இரா.துரைரத்தினமும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.சி தமிழ் வானொலியின் வளர்ச்சியை கண்டு பெருமை கொள்கிறேன்!! மூத்த ஊடகவியலாளர் | Ibc Radio Celebrating 25 Th Anniversary

ஐ.பி.சி தமிழ் வானொலி இன்று 25ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

ஐ.பி.சி தமிழ் வானொலியின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று யாழ். ஐ.பி.சி கலையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் இன்று கிடைத்தது. இதனை ஏற்பாடு செய்து தந்த ஐ.பி.சி தமிழ் யாழ். கலையகத்தினருக்கும், ஐ.பி.சி நிறைவேற்றுப்பணிப்பாளர் நிராஜ் டேவிட் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

ஐ.பி.சி தமிழ் வானொலி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் 1997ஆம் ஆண்டு யூன் 09ஆம் திகதி லண்டனில் இருந்து ஐரோப்பிய தமிழர்களின் இல்லங்களில் 24மணி நேரமும் ஒலிக்க தொடங்கியது. தாயக செய்திகளை யுத்தகள நிலவரங்களையும் விடுதலைப்போராட்ட அரசியல் கள நிலவரங்களையும் ஐரோப்பிய தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உறவுப்பாலம் என்ற ஒரு மணிநேர சிற்றலை ஒலிபரப்பு ஊடாகவும் தந்த பெருமை ஐ.பி.சி தமிழ் வானொலியை சாரும்.

ஐ.பி.சி தமிழ் வானொலியின் தந்தையான மதிப்புக்குரிய தாஸீஸியஸ் அவர்கள் உட்பட இந்த வானொலியின் வளர்ச்சிக்காக பணியாற்றிய பலரை நான் அறிவேன். அவர்கள் அனைவரும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.

தற்போது 25 வருடங்களை கடந்து வந்திருக்கின்ற இந்த வானொலியின் தற்போதைய நிர்வாகத்தினரும் பணியாளர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

யாழ். கலையகத்தை சென்று பார்த்த போது துடிப்புடன் பணியாற்றிக்கொண்டிருக்கும் இளம் ஊடகவியலாளர்கள் ஒலி ஒளிபரப்பாளர்களை கண்டு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தேன். யாழ். நகரில் சிறப்பான கலையகத்தை அமைத்திருக்கும் இந்நிறுவன தலைவர் கந்தையா பாஸ்கரன், நிறைவேற்றுப்பணிப்பாளர் நிராஜ் டேவிட் ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள்.

யாழ் கலையகத்தினருக்கும் எனது பாராட்டுக்கள். ஐ.பி.சி கலையகத்திற்குள் பிரவேசித்த போது என்னோடு பயணித்த பலர் என் கண் முன் நின்றார்கள். எனது நண்பர்களான நிமலராசன், நடேசன், சிவராம், மற்றும் எனது ஆசான் கோபு ஐயா ஆகியோரின் படங்களின் முன் ஒரு கணம் நிலைத்து நின்றேன்.

ஐ.பி.சி. தமிழ் யாழ் கலையகத்தினரின் அன்பான உபசரிப்பிற்கு பல கோடி நன்றிகள். இன்னும் பல மைல்கற்களை தொட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

என இரா.துரைரத்தினமும் தனது முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டார்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026