அனைவரும் வாரீர்: உதிரம் கொடுத்து உயிர் காப்போம் - ஐபிசி தமிழின் இரத்ததான முகாம்
உலகத் தமிழருக்கோர் உறவுப்பாலமாய் விளங்கும் ஐபிசி தமிழ் வானொலியின் ஏற்பாட்டில் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இரத்த தான முகாம் இன்று (09.06.2026) நடைபெறுகிறது.
ஐபிசி தமிழ் தனது 29 ஆண்டுகால ஊடகப் பயணத்தை நிறைவு செய்து 30 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிறப்பு தருணத்தை முன்னிட்டு இந்த சமூக நலச் செயற்பாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இரத்த தானம் செய்ய விருப்பமுள்ள பொதுமக்கள் அனைவரும் இன்று காலை 9 மணி முதல் ஐபிசி தமிழ் யாழ் கலையகத்திற்கு வருகை தந்து தங்களது இரத்தத்தை தானமாக வழங்கி உயிர் காக்கும் இந்த மனிதாபிமானப் பணியில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சொட்டு இரத்தம் கூட ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் அரிய வரமாக அமையக்கூடும். எனவே சமூகப் பொறுப்புணர்வுடன் இந்த இரத்த தான முகாமில் கலந்து கொண்டு உயிர் காக்கும் பணிக்கு கைகோர்க்குமாறு ஐபிசி தமிழ் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று நீங்கள் வழங்கும் இரத்தம், நாளை ஒருவரின் வாழ்வை காப்பாற்றலாம்” என்ற செய்தியுடன் அனைவரையும் இந்த இரத்த தான முகாமில் பங்கேற்க ஐபிசி தமிழ் அன்புடன் வரவேற்கிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |