ஈழத் தமிழர்களின் வலிகளைப் பேசும் பொம்மை திரைப்படம்
ஈழத்து சினிமாவை ஈழத் தமிழ் மக்கள் அங்கீகரிக்கும் வரை, ஈழத்து சினிமாவை ஈழத் தமிழ் மக்கள் கொண்டாடும் வரை, ஈழத்து சினிமாவை ஈழத் தமிழ் மக்கள் நேசிக்கும் வரை எங்களுடைய சினிமா வாழ்க்கை வெற்றியடைய முடியாது என பொம்மை திரைப்படத்தின் தயாரிப்பாளரும் ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத்து சினிமாவை நேசிக்கக் கூடிய அதையே மூச்சாக கொண்டிருக்கக்கூடிய ஏராளமான இளைஞர்கள், யுவதிகள் எங்களுடைய மண்ணிலே இருக்கின்றனர்.
அதிலும் சிறந்த படைப்பாளிகள் எங்களுடைய தேசத்திலே இருக்கின்றனர் எனினும் அவர்களுக்கான கதவு முழுமையாக திறக்கப்படவில்லை என்ற ஆதங்கம் இருக்கின்றது.” என தெரிவித்தார்.
ஈழத்தமிழர்கள் வாழ்வில் கடந்து வந்த வலிகளை கலை வடிவில் பேசும் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள பொம்மை திரைப்படத்தை அனைவரும் பார்வையிட வேண்டும் என பொம்மை பட இயக்குநர் நவயுகா அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்கள் அனுபவித்த கடந்த கால வலிகளை திரைப்படம் சிறப்பான எடுத்து காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
