எடுத்த காரியம் யாவினும் வெற்றி! வெள்ளி விழாக்காணும் IBC தமிழ் வானொலி
1997 ஜுன் 9. ஊடகப்பரப்பில் ஒரு உன்னத வானொலியாய், பிரித்தானிய தேசத்தில் உதயமாகிய Ibc தமிழ் வானொலி, 25 ஆண்டுகளை இன்று பெருமையோடு தொட்டு நிற்கிறது.
இந்த 25ஆண்டுகளில் அகிலமெங்கும் அளப்பரிய சேவைகளைப் புரிந்து,இன்றும் தன் சேவையைப் பல்வேறு துறைகளில் ஆற்றி நிற்கிறது. இதன் ஆரம்பத்தில் தாசிசியஸ் அவர்கள் பணிப்பாளராக இருந்தார்.
அதன்பின் பலரது அயராத,அர்ப்பணிப்பான சேவையினால் இன்று உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களின் மனதைக்கவர்ந்து, ஏராளமான நேயர் சொந்தங்களின் நன்மதிப்பை வென்று நிற்கிறது.
"எடுத்த காரியம் யாவினும் வெற்றி "என்ற மகுட வாசகத்தைத்தாங்கி ஆரம்பிக்கும்போது உண்மையிலேயே ஒரு உத்வேகம் மனதில் எழும். அந்த வாசகத்தை செயல் வடிவிலும் இன்று நிரூபித்து நிற்கிறது Ibc தமிழ்.
எங்கு இடர் வந்தபோதும் அங்கெல்லாம் கரம்கொடுத்து உடன் உதவும் பண்பைக்கொண்டிருப்பது இதன் அதிசிறப்பு. ஒரு ஊடகமானது எவ்வாறு மக்களுக்கு சேவையாற்றவேண்டுமென்பதற்கு Ibcதமிழ் சிறந்த முன்னுதாரணம் எனலாம்.
தற்போது Ibc தமிழ் நிறுவனத்தலைவர் பாஸ்கரன் கந்தையா அவர்களின் எண்ணத்தைச் சிறந்தவகையில் செயலாற்றும் நிறைவேற்றுப்பணிப்பாளர் நிராஜ்டேவிட் அவர்களும், வானொலிப்பணிப்பாளர் திரு.சத்தியமூர்த்தி சதீஸ் அவர்களும் வானொலி முகாமையாளராக துவாரகி விசாரதனுடன் இணைந்து பணியாற்றும் அனைத்துப்பணியாளர்களும் இதன் வெற்றிக்குக் காரணர்கள்.
25 அல்ல இன்னும் பல்லாண்டுகள் தமிழர்கள் அனைவருக்கும் தன்னிகரில்லா சேவையைத்தொடர்ந்தும் வழங்குவதோடு எம்முயிர்த்தமிழையும் பண்பாட்டையும் கலைகளையும் வளர்த்தெடுக்குமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
வெற்றி வரலாற்றைப்படைக்க ஆதாரமான எம் அனைத்து உறவுகளையும் இந்நேரத்தில் நன்றியோடு நினைவில் கொள்கிறோம்.







