ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் வெள்ள நிவாரண பணி
தமிழர் தாயகம் உட்பட நாடளாவிய ரீதியில் பெரும் வெள்ள அனர்த்தம் நிவாரணப்பணிகளில் கரங்கோர்க்குமாறு ஐ.பி.சி தமிழ் அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் உடைப்பெடுத்து கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் பாரிய சுகாதார சீர்கேடுகளையும் எதிர்கொண்டுள்ளனர் .
இந்நிலையில் இடருற்ற உறவுகளுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்கான வெள்ள நிவாரணப்பணிகளில் கரம் கோர்க்க இணைந்து கொள்ளுமாறு ஐ.பி.சி தமிழ் அழைப்பு விடுத்துள்ளது
எதிர்பாராமல் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் காரணமாக அவதியுறும் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளான உலருணவுகள் , மருந்துகள் , நுளம்புவலை ,குழந்தைகளுக்கான பால்மா மற்றும் ஆடைகள் போன்ற தேவைகள் இருப்பதாக பாதிக்கப்பட்ட தரப்புகளிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இப்பொருட்களை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.பி.சி தமிழ் காரியாலயத்தில் நேரடியாகவோ நன்கொடைகளாகவோ கையளிக்கமுடியும் என்பதுடன் மேலதிக தகவல்களை பெற +94 77 137 7306 என்ற whattappp இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகிறது
+44 7832769522 - பிரித்தானியா
+ 771377306 - இலங்கை
