அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள உலகக்கிண்ண டி20 துடுப்பாட்ட போட்டி: வெளியான விபரங்கள்
உலகக்கிண்ண டி20 துடுப்பாட்ட போட்டியானது அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.
இந்த போட்டியானது ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அந்தவகையில், ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நமீபியா, நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட 16 நாடுகள் விளையாடவுள்ளன.
விளையாடவுள்ள மைதானங்கள்
இந்த துடுப்பாட்ட போட்டியானது ஜிலாங் நகரில் உள்ள கார்டினியா மைதானம், போபார்ட்டின் பெலரீவ் ஓவல் மைதானம், பிரிஸ்பேனில் உள்ள தி கப்பா மைதானம், பெர்த்தில் உள்ள பெர்த் ஸ்டேடியம், அடிலெய்டில் உள்ள அடிலெய்டு ஓவல் மைதானம், சிட்னியில் உள்ள சிட்னி துடுப்பாட்ட மைதானம், மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் ஆகிய ஏழு மைதானங்களில் இடம்பெறவுள்ளன.
உலக கிண்ண துடுப்பாட்ட போட்டிகள் அனைத்தும் குரூப் ஸ்டேஜ் மற்றும் சூப்பர்-12 என பிரிக்கப்பட்டு அதன் கீழ் ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் அணிகள் விளையாடவுள்ளன.
ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இந்த போட்டியில் முதலில் இலங்கையும் நமீபியாவும் மோதவுள்ளன.
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தமை.