பாலியல் வழக்கில் கைதான தனுஷ்க குணதிலக்க தொடர்பில் வெளியான உத்தரவு..!
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பான செய்திகளை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சிட்னி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரியவந்துள்ளது.
தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
புதிய பிணை விண்ணப்பம்
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனிடையே, தனுஷ்க சார்பில் புதிய பிணை விண்ணப்பத்தை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கலாநிதி சானக சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் சிறிலங்கா கிரிக்கெட் இடைநிறுத்தியுள்ளது.
