பசுவின் வயிற்றில் 77 கிலோ ஐஸ்கிறீம் கப்ஸ் மற்றும் ஸ்பூன்கள் - கால்நடை மருத்துவர்கள் அதிர்ச்சி
பசு ஒன்றின் வயிற்றில் 77 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டைம்ஸ் ஒப் இந்தியாவில் வெளியான அறிக்கையின்படி, குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள் பசுவின் வயிற்றில் இருந்து ஐஸ்கிரீம் கப், ஸ்பூன் மற்றும் பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட கழிவுகளை அகற்றியுள்ளனர்.
ஆனந்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில், மருத்துவர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது.
முதலில் நோய்வாய்ப்பட்ட பசுவை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அறுவை சிகிச்சை குழுவைச் சேர்ந்த மருத்துவர் பினேஷ் பரிக் கூறுகையில், பசுவின் வயிற்றில் இருந்து அகற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும்பாலும் மக்கள் தங்கள் உணவை சாப்பிட்ட பிறகு வீதியோரங்களில் வீசும் குப்பைகள் தான் என்று தெரிவித்துள்ளார்.