கொழும்பில் விடுதி ஒன்றிலிருந்து பெண்களுடன் கைப்பற்றப்பட்ட பொருள்
கொழும்பு பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 650 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி ஒரு கோடியே பதினான்கு இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும்
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாகவும், அவர்கள் நீர்கொழும்பு மற்றும் கட்டான பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.ஏனைய மூன்று சந்தேகநபர்களும் கொழும்பு மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் .
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல்
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, பத்தரமுல்லை பகுதியிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம காவல்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |