ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு : வாயு மாசுபாடு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ள நிலையில், வாயு மாசுபாடு அதிகரிக்கக் கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் நேற்றிரவு இந்த எரிமலை வெடிக்க தொடங்கியிருந்த நிலையிலேயே, ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளியேற்றப்பட்ட மக்கள்
இவ்வாறாக வெளியேற்றப்பட்டவர்கள், பாதுகப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ரெய்க்ஜாவிக் தீபகற்பகத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், எரிமலை வெடிப்புக்கு முன்பாக நிலநடுக்கம் ஏற்படுமென விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |