ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் மீண்டும் எரிமலை வெடிப்பு
Iceland
By Sathangani
ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து நான்காவது முறையாகவும் எரிமலை வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள ஸ்டோரா ஸ்கோக்ஃபெல் மற்றும் ஹகாஃபெல் இடையே எரிமலை வெடிப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஐஸ்லாந்தின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எரிமலை வெடிப்பினால் சுமார் மூன்று கிலோமீற்றர் (சுமார் 1.9 மைல்) நீளமான பிளவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்த நடவடிக்கை
இதேவேளை ஐஸ்லாந்தின் முக்கிய சர்வதேச விமான நிலையம், கெப்லாவிக் விமான நிலையம் மற்றும் பிற பிராந்திய விமான நிலையங்கள் முழுமையாக செயற்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்