நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Kiruththikan
ஒமிக்ரோன்
நாட்டில் ஒமிக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக, மரண வீதமும் அதிகரித்துள்ளது.
எனவே மக்கள் வெளியில் செல்லும் போதும், பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்தும் போதும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களை பாடசாலைக்கு அனுப்பாது, உரிய வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
