காணாமல் போனவர் சடலமாக மீட்பு : வவுனியாவில் நேர்ந்த சோகம்
வவுனியா வீரபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த 06ஆம் திகதி முதல் காணாமல் போனதாகவும் நேற்றைய தினம் (08) குறித்த கல்குவாரியில் உள்ள நீரில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கல்குவாரியில் உள்ள நீரில்
குறித்த நபர் காணாமல் போன நிலையில் அவரின் குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடியுள்ளனர்.
இந் நிலையில் நேற்று (08) மாலை குறித்த கல்குவாரியில் உள்ள நீரில் சடலம் காணப்பட்டதை அடுத்து செட்டிக்குளம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தினை மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதேவேளை சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரி க. ஹரிபிரசாத் பார்வையிட்டிருந்தார்.
03 பிள்ளைகளின் தந்தையான சுப்பையா மருதன் என்ற 78 வயதுடைய முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளினை செட்டிகுளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |