நாடளாவிய ரீதியில் மருத்துவப் பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு
நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளின் மருத்துவப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (09) காலை 08.00 மணிக்கு பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இரசாயன ஆய்வாளர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க வல்லுநர்கள், உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் கொடுப்பனவு
இதேவேளை பாரபட்சமின்றி அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பணிப்புறக்கணிப்பை தொடர்வதா? என்பது தொடர்பில் இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களுக்கான Disturbance, Availability & Transport (DAT) கொடுப்பனவை இரட்டிப்பாக்க அதிபரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, (DAT) கொடுப்பனவை ரூ.35,000 லிருந்து ரூ.70,000 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |