ஹமாஸ் அமைப்பின் நிதிப்பொறுப்பாளர் விமானத்தாக்குதலில் பலி (படம்)
ஹமாஸ் அமைப்பிற்கு பணபரிமாற்றம் செய்யும் முக்கிய உறுப்பினர் தமது விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
காசாவின் ரபா நகரில் இராணுவ புலனாய்வுப்பிரிவின் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் சுபி பெர்வானா என்பவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.
நிதி பொறுப்பாளர்
இவர் ஹமாஸ் அமைப்பின் முன்னணி நிதியாளர் எனவும் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் அமைப்பிற்கு தேவையான இராணுவ உபகரண கொள்வனவிற்கான நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர் எனவும் இஸ்ரேல் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
?ELIMINATED: Subhi Ferwana.
— Israel Defense Forces (@IDF) December 19, 2023
Alongside his brother, he funneled tens of millions through his company 'Hamsat' to fund Hamas' military forces, terrorists' salaries and war activities.
The IDF, ISA and other security forces will continue their efforts to dismantle Hamas’ funding… pic.twitter.com/t8KrSAAjV2
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |