வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தப்பு : பிரபல கிரிக்கெட் வீரரின் அனுபவ பகிர்வு
சின்ன வயதில் தான் செய்த மிகப்பெரிய தப்பு எது என்பதை பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது சமுக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் செய்த தப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
“சின்ன வயசுல நான் கிரிக்கெட் விளையாட தொடங்கியபோது உடலை மேம்படுத்த டயட் இருக்க தொடங்கியபோது டொக்டர்கள் முதல் பெரும்பாலானவர்கள் கொடுத்த அறிவுரை, அரிசி சாதம் சாப்பிட வேண்டாம். சப்பாத்தி, பருப்பு, ரொட்டி இது மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
சப்பாத்தி, பருப்பு, ரொட்டி
என் வாழ்க்கையில் நான் செஞ்ச பெரிய தப்பு அதுதான்.
ஒரு 30 வயசு வரைக்குமே அதை நான் உணரவில்லை. பாலில் உள்ள லாக்டோன், கோதுமை பொருட்களில் உள்ள க்ளூட்டன் ஆகியவை உடல் எடையை குறைக்க உதவாது. மாறாக உடல் எடையைதான் அதிகரிக்கும்.
எந்த பயனும் விளையாது
அதனால் நீங்கள் ஜிம்முக்கு சென்று வொர்க் அவுட் செய்தாலும் இவற்றை சாப்பிடுவதால் உடல் எடையை இழக்க முடியாது” என்று கூறியுள்ளார். அதனால் இவற்றை டயட் உணவாக எண்ணி அதிகம் சாப்பிடுவதால் எந்த பயனும் விளையாது என அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |