சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்திருந்தால்.. அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்
சீனாவில்(china) உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு டோக் குரங்குகளை வழங்கும் திட்டம் வெற்றியடைந்திருந்தால், மற்ற நாடுகளும் டோக் குரங்குகளை கோரியிருக்கும், இது இந்த விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை குறைக்க உதவியிருக்கும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர(mahinda amaraweera) தெரிவித்தார்.
கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் பயிர்கள் குரங்குகளால் நாசம் செய்வதாக புகார்கள் அளித்ததை அடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தடையால் நிறுத்தப்பட்டதிட்டம்
ஆரம்பத்தில், 100,000 டோக் குரங்குகளை சீன உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்பும் திட்டம் இருந்தது, ஆனால் விலங்கு நட்பு அமைப்புகளால் பெறப்பட்ட தடை உத்தரவு காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டது, என்றார்.
வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை நிவர்த்தி செய்ய, துப்பாக்கிகளை வழங்குவதற்கு தேவையான குறைந்தபட்ச நிலத்தின் அளவை ஐந்து ஏக்கரில் இருந்து இரண்டு ஏக்கராக குறைக்க அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதாக அமைச்சர் அறிவித்தார்.
தேங்காய்கள்
தென்னை, காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற பயிர்களை சேதப்படுத்தும் இந்த குரங்குகளால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கணிசமான பயிர் இழப்புகளை எதிர்நோக்குவதாக தெரிவித்தனர்.
800 தேங்காய்களில் இருந்து 100க்கும் குறைவான தேங்காய்கள் கூட குறைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
காட்டுப்பன்றிகள், மயில்கள், டோக் குரங்குகள் மற்றும் ராட்சத அணில்களால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதை ஒப்புக்கொண்ட அமைச்சர் அமரவீர, அவற்றின் பெருகிவரும் சனத்தொகையே இதற்குக் காரணம் என்றார். அமைச்சரவைப் பத்திரத்தை அனுமதிக்காக தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |