அநுர அரசாங்கத்திற்கு நாமல் கூறும் அறிவுரை
தற்போதைய அரசாங்கம் ஆண்டு முழுவதும் மக்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவையாவது வழங்குவதை உறுதிப்படுத்த முடிந்தால், அதுவே போதுமானதாக இருக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துடன் கார் ஒன்றில் பயணமொன்றுக்கு புறப்படுகையில் ஊடகவியலாளர் ஒருவருக்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, புத்தாண்டு இதுவரை சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்த நாமல் ராஜபக்ச, "தாம் இப்படியே சென்றாலும் பரவாயில்லை என்றும் மக்கள் ஆண்டு முழுவதும் ஒரு நாளைக்கு மூன்று வேளையாவது சாப்பிட முடியும் என்பதை அரசாங்கம் உறுதி செய்தால் நல்லது எனவும் குறிப்பிட்டார்.
மக்களின் வாழ்க்கை
மேலும் அவர் கூறியதாவது, “மக்கள் அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இப்போது அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறுவது போல், சிறிய கார்கள் அல்லது பேருந்துகளில் பயணம் செய்வது நல்லது.
ஆனால் உண்மையில் முக்கியமானது அரசாங்கம், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும் ஆகும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |