காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: 42 பேர் பலி
காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) நடத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
காசா முனையின் மத்திய காசா, நுசிரத், சவாடா, மஹானி, டிர் அல் பலாக் ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் (03.01.2025) தாக்குதல் மேற்கொண்டது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 10-ஆம் திகதி தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் போரில் 42,972 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வான்வழி தாக்குதல்
ஹமாஸ் (Hamas) தலைமையிலான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,139 ஆகும், அதேசமயம் 200-க்கும் அதிகமானோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காசா முனையின் மத்திய காசா, நுசிரத், சவாடா, மஹானி, டிர் அல் பலாக் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர்.
அதேவேளை, பணய கைதிகள் மீட்பு, போரை நிறுத்துவது தொடர்பாக ஹமாஸ் (Hamas) அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.
கட்டாரின் தலைநகர் டோஹாவில் இந்த பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |