மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் 12 யானைகள் அட்டகாசம்!
மட்டக்களப்பு மாந்தீவுக்குள் புகுந்துள்ள 12 யானைகள் இன்று(22) ஞாயிற்றுக்கிழமை திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்திவருகின்றது.
5 தினங்களாக தொடர்ந்து யானைகள் வந்து நெற்பயிர்கள் மற்றும் பயிர்களை நாசம் செய்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த யானைகள் மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை எனவும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கையும் தோல்வியடைந்துள்ளது.
பொதுமக்கள் அவதி
இதேவேளை வனஜீவராசிகள் திணைக்களமும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குறித்த யானைகளை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
12 யானைகளும் அருகில் உள்ள விமான நிலையத்துக்கு கூடாக மாந்தீவுக்குள் சென்று புகுந்துள்ளது திரும்பவும் இரவு வேலைகளில் நேரம் மீண்டும் வருவது வழமை இதன் காரணமாக அப்பகுதி மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடன் கழித்துவருவதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |