திலீபனின் திருவுருவச் சிலையை பலவந்தமாக அகற்றிய காவல்துறையினர் : வெளியான காணொளி
யாழ்ப்பாணம் - நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவச்சிலையை யாழ்ப்பாணம் காவல்துறையினர் பலவந்தமாக அகற்றியுள்ளனர்.
திலீபனின் நினைவிடத்திற்கு இன்று (27) காலை 06.30 மணியளவில் தங்களுடைய வாகனத்தில் வந்த சுமார் பத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் குறித்த சிலையை அகற்றி எடுத்துச் செல்லும் சிசிரிவி காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சிலையை வைத்தவர்களுக்கு எந்தவித முன்னறிவித்தலுமின்றி திலீபனின் நினைவிடத்திற்குள் பாதணிகளுடன் சென்று குறித்த சிலையை பலவந்தமாக அகற்றிச் சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று (26) குறித்த இடத்தில் ஏராளமான மக்கள் அணிதிரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திருவுருவச்சிலை அகற்றம்.... பின்னணியில் சி.வி.கே : எழுந்துள்ள குற்றச்சாட்டு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |