ரணில் இப்போது தோற்றாலும் ஆறு மாதங்களில் மீண்டும் ஜனாதிபதி : இராஜாங்க அமைச்சர் பகிரங்கம்
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தோற்றாலும், ஆறு மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாவார் என தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன (Anuradha Lanka Jayaratne) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்ய இன, மத, பேதங்கள் இன்றி இணைந்து செயற்பட முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவளிக்கும் தலைவர்
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து ஆதரவளிக்கும் ஒரே தலைவராக ரணில் விக்ரமசிங்க திகழ்கின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் வேறு வேட்பாளர் ஒருவர் தேர்தலில் வெற்றியீட்டி, ஜனாதியாக நியமிக்கப்பட்டாலும் ஆறு மாதங்களில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாவார் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |