எரிபொருள் விலை அதிகரிக்கப்படாவிட்டால்.....அடுத்து என்ன நடக்கும்?
எரிபொருள் விலை அதிகரிக்கப்படாவிட்டால் மின் உற்பத்தி நிலையங்கள், புகையிரதங்கள், பயணிகள் பேருந்துகள் மற்றும் ஆயுதப்படை, காவல்துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க (Sumith Wijesinghe)சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு டீசல் லீட்டர் ஒன்றுக்கு ரூ.50ம், பெற்றோல் லீட்டர் ஒன்றுக்கு ரூ.17ம் இழப்பு ஏற்படுகிறது எனவும் அவர் கூறினார்.
இதன்படி, நாளாந்தம் 365 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விலை அதிகரிக்கப்படாவிட்டால், இந்த இழப்பை ஈடு செய்ய முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.
எனவே எரிபொருள் விலையை அதிகரிப்பது அத்தியாவசியமானது எனவும், இல்லையெனில் இந்த மாதம் ஏற்படும் நஷ்டம் அதிகரித்து நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
