போராட்டகாரர்களுக்கு காவல்துறை பேச்சாளர் எச்சரிக்கை
By Sumithiran
உறுதிப்படுத்திய புலனாய்வுப்பிரிவு
போராட்டங்கள் வன்முறையாக மாறினால் சட்டப்படி கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
போராட்டம் வன்முறையாக மாறினால்
“நாளை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று தகவல் பகிரப்படுகிறது. புலனாய்வு அமைப்புகளும் உறுதி செய்துள்ளன. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை அமைதியாக அனுபவிக்கவும். போராட்டம் வன்முறையாக மாறினால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும். போராட்டத்தை நடத்தும் மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபடாதீர்கள்.
காவல்துறைக்கு பாதுகாப்பு படையினர் ஆதரவு அளித்து வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படை உறுப்பினர்களுடன் மோதலில் ஈடுபட வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 6 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி