அம்பாந்தோட்டையில் குடும்பப் பெண் படுகொலை: கணவருக்கு வலைவீச்சு!
அம்பாந்தோட்டையில் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வலஸ்முல்லை பிரதேசத்தில் நேற்று (09-11-2026) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயாரான 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆத்திரமடைந்த கணவர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை கடுமையாக மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவர் வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பியோடிய நபர்
தாக்குதலுக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவத்தைச் செய்த பின்னர் 42 வயதுடைய கணவர் அந்தப் பகுதியிலிருந்து தலைமறைவாகி தப்பியோடியுள்ளார்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டதுடன் அதைப் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தப்பியோடிய நபரை கைது செய்வதற்காக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |