தேவைப்பட்டால் ஈரான் மீது தாக்குதல்: ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அத்தோடு வெள்ளை மாளிகையில் கத்தார் பிரதமருடனான உயர்நிலை இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஈரானுடனான மோதலில் கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகள் அமைதியான தீர்வையே விரும்புகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போர்ப் பதற்றங்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
பிராந்தியத்தில் போர்ப் பதற்றங்கள் தணிவதையும் அமைதியான முறையில் உடன்பாடு எட்டப்படுவதையுமே கத்தார் மற்றும் சவுதி அரேபியா விரும்புகின்றன என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தபோதிலும் அமெரிக்கா தனது இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிடவில்லை என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்தோடு நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தத் தயாராகவே இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெஹ்ரானுக்கு நேரில் சென்று ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கத்தார் பிரதமர், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அமெரிக்கா மற்றும் ஈரான் மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும் தயாரித்துள்ள பல கட்டங்கள் அடங்கிய உடன்பாட்டு முன்மொழிவை ட்ரம்பிடம் சமர்ப்பித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் அதே வேளையில், 7 நிபந்தனைகளை முன்வைத்துள்ள ஈரானின் நிலைப்பாடு மற்றும் ட்ரம்பின் இந்த எச்சரிக்கை ஆகியவை மத்திய கிழக்கில் இராஜதந்திர முயற்சிகளுக்கான தீர்வை நோக்கிய முக்கியக் கட்டமாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |