சலே மீதான விசாரணை நகர்வில் சிக்கிக்கொண்ட கோட்டாபய: நாட்டை விட்டு ஓட தீவிர முயற்சி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை விவகாரத்தில் கோட்டாபய ராஜபக்ச தூக்குமேடைக்குச் செல்லும் நிலை ஏற்படலாம் எனவும், இதன் காரணமாகவே நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கின்றார் என்றும் இலங்கைத் தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் தற்போது வெளிவந்துகொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
சலேவுக்கு பின்னால் இருக்கும் சதி
சுரேஷ் சலேவை இயக்கியவர் யார், அவருக்குப் பின்னால் இருந்து செயற்பட்டவர் யார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

சலேவின் தலைவர் யார் என்பதும் முக்கியமான கேள்வியாகும். கோட்டாபய ராஜபக்சவின் கூலிக் கொலையாளி சுரேஷ் சலே.
மேலும் கண்டறிக புவியியல் காண் நகரங்களை ஆராய்க அரசு சேவைகள் இந்த விசாரணைகள் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன.
இதனால்தான் கோட்டாபய நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கின்றார். எனினும், அவருக்கு நாட்டை விட்டு வெளியேற அனுமதி கிடைக்காது.
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கோட்டாபய சிறைக்குச் செல்வார். நிலைமை மேலும் தீவிரமடைந்தால், அவர் தூக்குமேடைக்குச் செல்லும் நிலையும் ஏற்படலாம்.
இந்தச் செயற்பாடுகள் பௌத்த மதத்தையோ புனித வழிபாட்டுத் தலங்களையோ பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படுபவை அல்ல. கோட்டாபயவைச் சுற்றியுள்ள அணியினரின் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இவை முன்னெடுக்கப்படுகின்றன” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |