படகிலிருந்து இலங்கை வழிகாட்டியை கடலுக்குள் தள்ளிய இஸ்ரேலியர்: வைரலாகும் காணொளி

Viral Video Sri Lankan Peoples Sri Lanka Social Media Tourism Social Media
By Pavi Nov 09, 2026 10:54 AM GMT
Report

இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர், இலங்கை சுற்றுலா வழிகாட்டியைப் படகிலிருந்து கடலுக்குள் தள்ளும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய ஊடகமான RT வெளியிட்டுள்ள குறித்த காணொளியில், இலங்கையில் படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் குழுவினர் காணப்படுகின்றனர்.

இதன்போது, தண்ணீர் குடித்தகொண்டிருந்த இலங்கை சுற்றுலா வழிகாட்டியை, அக்குழுவில் இருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் திடீரென கடலுக்குள் தள்ளும் காட்சி பதிவாகி உள்ளது. 

மூவாயிரம் கோடிக்கும் அதிக நட்டத்தை சந்தித்துள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்

மூவாயிரம் கோடிக்கும் அதிக நட்டத்தை சந்தித்துள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்

இலங்கை சுற்றுலா வழிகாட்டி

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியிடம் சுற்றுலாப் பயணிகள் நடந்துகொண்ட விதம் குறித்து பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்ட இஸ்ரேலிய ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான டேனியல் அம்ராம், குறித்த  காணொளி பற்றி விளக்கியுள்ளார். 

இது தொடர்பில் விளக்கமளித்த அவர், இந்தச் சம்பவம் நகைச்சுவைக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், சுற்றுலா வழிகாட்டியும் அதில் பங்கேற்றிருந்ததாகவும் குறித்த சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா வழிகாட்டியை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இருக்கவில்லை என்றும், அவர் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் காணொளி வெளியானதைத் தொடர்ந்து தங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் வெறுப்புணர்வு குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தாம் இன்னும் ஒரு மாதத்தில் இராணுவத்தில் இணையவுள்ளதாகவும், தாங்கள் நல்ல பிள்ளைகள் என்றும், இவ்வாறான வெறுப்புக்கு உள்ளாகத் தகுதியற்றவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளதாக டேனியல் அம்ராம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விளக்கம் அவர் கொடுத்திருந்தாலும் குறித்த காணொளி இன்னும் சமூக வலைத்தள பக்கத்தில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. 

இலங்கையில் இருந்து ஏவப்பட்ட செயற்கைகோளுக்கும் நிலக்கரி இறக்குமதி மோசடிக்கும் தொடர்பு

இலங்கையில் இருந்து ஏவப்பட்ட செயற்கைகோளுக்கும் நிலக்கரி இறக்குமதி மோசடிக்கும் தொடர்பு

சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி

சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026