திருகோணமலையில் நீரில் மூழ்கிய தாழ்நில பகுதிகள்:இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Trincomalee
Weather
Rain
By H. A. Roshan
நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் தாழ் நில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தம்பலகாமம், கிண்ணியா, மூதூர் மற்றும் கந்தளாய் பகுதியில் உள்ள தாழ் நில பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில் உள்ளன.
இன்றும் மழை பெய்யும்
பெரும்போக நெற் செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் தொடர் மழை பெய்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி