தேர்தல் தொடர்பில் அதிபர் ரணில் வெளியிட்ட அறிவிப்பு
உத்தேச உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி மார்ச் 20ஆம் திகதிக்கு முன் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளான பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகளை ஆரம்பித்துள்ளன.
உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவதே தமது கட்சியின் நிலைப்பாடு என மொட்டுவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து இறுதி செய்துள்ளது.
தேர்தலுக்கு இது பொருத்தமான தருணம் அல்ல
தேர்தலுக்கு சகலரும் தயாராக இருந்தாலும், தேர்தலுக்கு இது பொருத்தமான தருணம் அல்ல என அதிபர் ரணில் கூறுகிறார். இந்த நேரத்தில் வாக்களிக்க பணம் எங்கே கிடைக்கும்? அரசாங்கத்தை மாற்றும் பொதுத் தேர்தலோ, அதிபர் தேர்தலோ பரவாயில்லை, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், மருந்து கொண்டு வர முடியாமல் கஷ்டப்படும் போது கோடிக்கணக்கில் செலவு செய்து வாக்களிக்க முடியுமா?
சாப்பாடு, குடிநீர், சம்பளம் என்று பணத்தை வாக்களிக்க போட்டால் ஏப்ரல் மாதத்திற்குள் மீண்டும் எரிபொருளுக்கு வரிசை,எரிவாயு வரிசைகள் வரும். இறுதியாக கிளர்ச்சி ஏற்படும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் அணி கூட்டத்தில் ரணில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, எதிர்வரும் மார்ச் மாதம் நிச்சயமாக தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
